எல்லாத் தமிழ் இலக்கியங்களும் பேசுகின்ற ‘மள்ளர்களே’ இன்றைய ‘பள்ளர்கள்’ என்பதை

உலகிலேயே வளங்களுக்கேற்ப நிலங்களை குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை எனப் பாகுபடுத்தி,இலக்கணப் படுத்தியவர்கள் தமிழர்கள். அதில் மருத நிலா மக்களின் மரபுப் பெயரே ‘மள்ளர்’ என்பதாகும். ‘மள்ளர்’ என்பதற்கு ‘உழவர்’ என்றும், ‘வீரன்’ என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கண்டுள்ளன.

‘அருந்திறல் வீரர்க்கும் பெருந்திரள் உழவர்க்கும்
வருந்தகையத்தாகும் மள்ளர் எனும் பெயர்’

என்பது திவாகர நிகண்டு வகுத்த இலக்கணம் ஆகும். இவ்வாறே ‘மள்ளர்’ என்ற சொல்லிற்கு பிங்கல நிகண்டும், வடமலை நிகண்டும்,சூடாமணி நிகண்டும் இலக்கணம் வகுத்துள்ளன.

* டி.கே. வேலுப்பிள்ளை
* ஞா.தேவநேயப் பாவாணர்
* சோ.இலக்குமிதரன் பாரதி
* எம்.சீனிவாச ஐயங்கார்
* எ.வி.சுப்ரமணிய அய்யர்
* வீரமா முனிவர்
* கச்சியப்ப முனிவர்
* திருவாடுதுறை ஆதீனம்
* ந.சேதுரகுனாதன்
* ஈக்காடு ரத்தினவேலு முதலியார்
* இரா.தேவ ஆசீர்வாதம்
* பேராசிரியர். குருசாமி சித்தர்
* பேராசிரியர். தே.ஞான சேகரன்
* அறிஞர் குணா
* மேலைநாட்டு அறிஞர் முனைவர் வின்சுலோ
* மேலைநாட்டு அறிஞர் சி.ஒப்பார்ட்
* கே.ஆர்.அனுமந்தன்
* யாழ்ப்பாணத்து அறிஞர்களான ந.சி.கந்தையாப் பிள்ளை
* பண்டித சவரிராயர்
ஆகிய அறிஞர்கள் ஆய்ந்தறிந்து கூறியுள்ளனர்.

* சேலம் மாவட்ட குடிக்கணக்கும் (1961)
* கேரளா பண்பாட்டு வரலாற்று நிகண்டும்
மள்ளர்களே ‘பள்ளர்கள்’ என்று பதிவு செய்துள்ளது.

பள்ளர் என்னும் மள்ளர்களே ‘பாண்டிய மரபினர்’ என்பதை முக்கூடற்ப் பள்ளு (செய்யுள்: 91), திருவேட்டை நல்லூர் அய்யனார் பள்ளு (செய்யுள் 35,149,159), திருமலை முருகன் பள்ளு ,ஏழு நகரத்தார் பேரிற் பள்ளு (செய்யுள்: 3,4,7,8,13,14), வேதாந்தப் பள்ளு (செய்யுள்: 35), பறாளை விநாயகப் பள்ளு (செய்யுள்: 79), மேரூர் நல்லபுள்ளியம்மன் பள்ளு, தென்காசைப் பள்ளு, கட்டிமகிபன் பள்ளு, செங்கோட்டுப் பள்ளு ஆகிய பள்ளு இலக்கிய செய்யுள்கள் மூலம் அறிய முடிகிறது.

மருத நில ஆறுகளிலும், குளங்களிலும்,கண்மாய்களிலும்,வயல்களிலும் மள்ளர்களின் வாழ்வியலோடு மீன்களும் இருப்பதாலும், வானத்து மீன்களைக் கொண்டே பருவ காலங்களைக் கணக்கிட்டுப் பயிர் செய்கையை மேற்கொண்டதாலும், மள்ளர் குலத்தவர்கலான பாண்டியர்களுக்கே மீன் சின்னம் வாய்த்தது.

வீரபாண்டிய புரம், சுந்தர பாண்டிய புரம்,திருநெல்வேலி மாவட்டத்தில் அழகிய பாண்டிய புரம், சுந்தரபாண்டிய புரம், தூத்துக்குடி மாவட்டத்தில் பராக்கிரம பாண்டி,புதூர் பாண்டியாபுரம், போன்ற பாண்டியர் பெயர் தாங்கிய பள்ளர் ஊர்களே, பள்ளர்களே பாண்டிய மரபினர் என்பதை உறுதி செய்கின்றது.

பாண்டியர்களின் கடைசிப் போர் கயத்தாறில் நடக்கிறது. போரின் முடிவில் பாண்டியர்களும், அவர்தம் உறவினர்களும்,மேற்கு நோக்கி சென்று பொதிகை மலையில் தஞ்சம் அடைகின்றனர். பின்னாளில் பொதிகள் மலையில் இருந்து கீழிறங்கிய பாண்டியர்கள் வழி வாழ்ந்த பள்ளர்களே இன்று செங்கோட்டை,தென்காசி வட்டங்களில் ‘பாண்டியர் குல விவசாயம்’ என்ற நில ஆவணத்தொடும், 1924 இல் ‘பாண்டியர் சங்கம்’  தொடங்கியும், 09.03.1946 இல் ‘பாண்டியர் சங்க மாநாடும்’ நடத்தியுள்ளனர். அப்பகுதிப் பள்ளர்கள் இன்றும் தங்களைப் ‘பாண்டியர் சமுதாயம்’ என்றே அழைத்தும், அடையாள படுத்தியும் வருகின்றனர்.

வரலாற்று பெருமையும், பண்பாட்டு சிறப்பும் கொண்ட மள்ளர்கள் மீது கடந்த ஒரு நூற்றாண்டாக அரிசனன்,ஆதி திராவிடன்,தாழ்த்தப் பட்டவன், தலித் என்ற இழிவுப் பெயர்களை வலியத் திணிக்கும் போக்கினை திராவிட கட்சிகளும், அதன் ஆட்சியாளர்களுமே செய்து வருகின்றனர். வெண்ணைத் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போல, தமிழ்தேசிய ஓர்மை பொங்கி வருகின்ற இக்கால கட்டத்தில், முதல்வர் செயலலிதா மள்ளர்,நாடார் ஆகிய தமிழ்சாதிகளை சீண்டி விடுவதை தமிழின உறவுகள் புரிந்துகொள்ள வேண்டும்.

வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர்வது முதலமைச்சரோ, நீதிபதியோ செய்ய வேண்டிய வேலை அல்ல. தமிழக முதல்வர் தமிழர் வரலாற்றை திறக்கின்ற வேலையை விட்டு விட்டு வரலாறு உண்மையைத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது’ என்கிறார் செந்தில் மள்ளர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s