பள்ளு இலக்கியம் மறுவாசிப்பு

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து….

பள்ளு இலக்கியம்
மறுவாசிப்புப் பிரதிக்கு வெளியே.. என்னும் நூலின் திறனாய்வுக் கட்டுரையாக இது
அமைகிறது. தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களால் கட்டப்பட்ட சமூகம். ஒரு சாதி தனக்கான
வரலாற்றின் மூலமே மையம் / விளிம்பு என அடையாளப்படுகிறது. வரலாறு என்பது
“அடிப்படையில் தனக்கான உரையாடலைத் தாமே கட்டுவது தான்” என்று அறிஞர் டெப்ரேய்
கூறுவார். இந்த வரலாறுகளைத் தேடிக் ட்டுவதற்கு ஆசிரியர் பின் நவீனத்துவம் சார்ந்த
மறுவாசிப்பு அணுகுமுறையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஏனெனில் பின் நவீனத்துவ
வாசிப்புப் பன்மைத் தன்மையுடையதாய் இருக்கின்றது. அதிகார மையத்தைக்
கேள்விக்குள்ளாக்குகிறது. பகடி செய்கிறது. திரும்பத் திரும்ப உடைக்கிறது.
ஒழுங்கானதைக் கலைத்துப் போடுகிறது. மறு கட்டமைப்புச் செய்கிறது. மறுவாசிப்பிற்கான
காரணங்களைப் பின்வருமாறு படைப்பாளர் கூறுகிறார். “நெல் வேளாண்மைத் தொழிலையுடைய
தேவேந்திர குல வேளாளர் இனத்தவர் எல்லாக் காலத்திலும் பண்ணை வேலையாட்களாக
இருந்தார்களா? இவர்களுக்கென்று தனியான வேளாண் நிலம் இல்ல்‘திருந்ததா? இவர்களை
மட்டும் இந்த இலக்கியத்தின் பாடு பொருளாக்கித் தாழ்த்தி வைக்க நினைத்த சமூகக்
காரணிகள் என்ன? தமிழக வரலாற்றுடன் மள்ளர்கள் தொடர்புபடுத்தாமலேயே, வெறும் இலக்கிய
வாசிப்பாக மட்டுமே, பள்ளு இலக்கியப் பிரதிகள் வாசிக்கப்பட்டுள்ளன. இதற்கு மாறாறக,
இவர்களின் வரலாறுகளைக் கல்வெட்டுச் சான்றுகள், பட்டயங்கள், வரலாற்றுச் சான்றுகள்,
இலக்கியச் சான்றுகள், நாட்டுப்புள வழக்காற்றுச் சான்றுகளில் தேடித் கொகுத்து,
இவர்களின் பண்பாட்டு அடையாளங்களை அறிமுகம் செய்ய முயல்கிறத. இதனை மள்ளரிய வாசிப்பு
அணுகுமுறை என்று புரிந்து கொள்ளலாம். பள்ளு இலக்கியங்கள் இதுவரையிலும் மள்ளர் எனும்
தேவேந்திர குல வேளாளர்களை விளிம்புநிலை மக்களாகவும், வேளாண் கூலியாகவும்
வரலாறுகளைக் கட்டியுள்ளன. பள்ளு இலக்கியங்கள் 17 ஆம் நூற்றாண்டில்
எழுதப்பட்டிருக்கின்றன. இக்காலகட்டமானது தமிழகத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சி
நடந்த காலமாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்களின் காலத்திலேயே பாளையப்பட்டு முறையின்
வாயிலாக மள்ளர்கள் தங்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, பள்ளர்களாக
வீழ்த்தப்பட்டார்கள். ஒரு சமூகத்தைத் தனக்குக் கீழான சமூகமாகக்
கட்டமைக்கடுகின்றபொழுது கட்டமைக்கின்ற சமூகம் மேலான சமூகமாகத் தன்னைத் தகவமைத்துக்
கொள்கிறது. இங்கு மையமாக இருந்த மள்ளர்களை விளிம்பு நிலைக்கு விட்டு, விளிம்பில்
இருந்த தெலுங்கு மொழி பேசும் நாயக்கர்கள் மைமானார்கள். இந்த வரலாற்று நிகழ்வை
நூலாசிரியர் மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு தனக்கான வாசிப்பினை
நிகழ்த்தியிருக்கிறார்.

ஒரு பிரதி தன்னைத் தானே தகர்த்துக் கொள்கிறது என்ற
கூற்றிற்கேற்ப, மள்ளர்களை வரலாறுஅற்றவர்களாக ஒடுக்கி வைப்பதற்காக எழுதப்பட்ட பள்ளு
இலக்கியங்களில் மள்ளர்களின் உண்மை வரலாறும் மறைமுகமாகப் பதிவாகியுள்ளது.
“மள்ளர்களைப் பள்ளர் என்று அழைப்பதை ஏற்க முறுப்பதை முக்கூடற்பள்ளிர் ஆசிரியரே
பதிவு செய்துள்ளார். இதனை,

“பக்கமே தூரப் போயும்
தக்க சோறென் வேளாண்மை

பள்ளா பள்ளா என்பான் மெய்
கொள்ளாதவர்…”

என்ற பாடல் அடிகளின் மூலமாக
அறியலாம். பள்ளர் என்பது இவர்களின் வழி வழியான பெயராக இரந்திருந்தால் இப்பெயரால்
பிறர் உயர்வு, தாழ்வுகண்டிருக்க மாட்டார்கள். மரபு வழியில் இவர்களுக்கு வேறு பெயர்
இருக்க “பள்ளர்” என்பது திடுமெனப் புழக்கத்தில் வரும் போது அதனை எதிர்ப்பது
இயல்பாகவே இருந்திருப்பதை முக்கூடற்பள்ளு புலப்படுகிறது. “பன்னிரு பாட்டியல்
உழத்திப் பாட்டு” என்னும் சிற்றிலக்கிய வகையையும், அதற்கான இலக்கணத்€த்யும்
குறிப்பிடுகிறது. எனவே, அவ்விலக்கணத்தின்படி உழத்திப் பாட்டு என்றும் தனி இலக்கிய
வகையே அன்றைய அரசியல் மாற்றத்தால் மறைக்கப்பட்டு, அதற்கு நேர்மாறாக அவர்களைப் பண்ணை
வேலையாட்களாகச் சித்தரிக்கும் பள்ளுப் பிரபந்தமாக்கிப் பிரபலப்படுத்தியிருப்பர்.
16, 17ஆம் நூற்றாண்டுகளில் சைவ-வைணவ சமயங்களுக்குள் நடந்த சமயப் பூசல்களைப் பதிவு
செய்வதற்காகவும், பள்ளு இலக்கியங்களையும், பள்ளு நாடகங்களையும் பயன்படுத்திக்
கொண்டார்கள்” என்று ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

மேலும் “நெல் வேளாண்மை
குறித்துத் தமிழ் இலக்கியம் முழுவதும் சங்கம் முதல் பள்ளு நூல்கள் வரை மருதநிலத்
திணை நில வாழ்க்கையே ஆகும். இந்த மருத நில வேளாண் வாழ்வின் அதாவது, நெல் வேளாண்
வாழ்வின் தனித்த இலக்கிய வகையே பள்ளு நூல்கள்” என்கிறார்.

நெல்லுக்கும்,
தேவேந்திர குல வேளாளர்களுக்குமான உறவுகளைத் தொன்மங்களைக் கொண்டு புலப்படுத்தி
உள்ளார் வரலாற்று அறிஞர் கே.ஆர். அனுமந்தன். “ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நெல்
வேளாண்€ம்யை விடாமல் செய்து வரும் ஒரே சமூகம் உண்டென்றால் அது பள்ளர்கள்தான்” என்று
கூறுவார். தேவேந்திர குல வேளாளர்களுக்கு ‘குடும்பன்’ என்ற பெயரும் உண்டு. இதனை
நாட்டுப்புறவியல் அறிஞர் தே.லூர்து, “தமிழர்களின் தொன்மத்தை நான் தேடி அலைந்தேன்.
அத்தொன்மம் தேவேந்திர குல மக்களிடம் காணப்படுவதைக் கண்டு வியந்தேன். இந்த மக்களின்
தலைவனாம் வேந்தன் (இந்திரன்) தாந் நீரைக் கண்டு பிடித்தான். நெல்லைப்பூமிக்கு முதன்
முதலில் கொண்டு வந்தான். நாகரிகம் கண்டான். அரசைத் தோற்றுவித்தான். இந்த நதிக்கரை
நாகரிகத்தில் தாந் ‘குடும்பம்’ தோன்றியது. ‘குடும்பன்’ எனும் சாதிப் பெயர்
இவர்களிடம் தானே இருக்கிறது” என்பார்.

இந்திரவிழா எனும் நாற்று நடவுத்
திருவிழ மள்ளர்களின் வாழ்வில் நிலைத்து விட்டதைக் கள ஆய்வு செய்து மொழிந்துள்ளார்.
கோவைமாவட்டம், பேரூர் பட்டீஸ்வரன் கோயிலில் இந்திர விழ நிகழ்வதைச்
சான்றாக்கியுள்ளார். கரூர் மாவட்டத்தில் மள்ளர் குலத்தில் காணப்படும் மல்ல்‘ண்டை
வழிபாட்டினைத் தொல்லியல் ஆய்வு செய்து ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். ‘மள்ளர்’
எனும் வரலாற்றுப் பெயருக்கும் ‘பள்ளர்’ எனும் பெயருக்குமிடையேயான வேறுபாடுகளை குறி
(Sign), குறிப்பான் (Signifier), குறிப்பீடுகளின் (Signigied) வழி நின்று பின்
நவீனத்துவ நோக்கில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.

உண்மையான உண்மை என்று எதுவும்
இல்லை என்பதைப்போல, எந்த ஒரு பிரதிக்கும் ஒற்றை அர்த்தம் இல்லை. பன்மைத்தன்மையான
அர்த்தங்கள் உள்ளன. இது பள்ளு இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் இன்று
தமிழகத்தில் வேளாண் கூலிகளாக, ஒடுக்கப்பட்டவர்களாக, வரலாறு அற்றவர்களாகக்
கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளர்கள், சங்க கால முத்தமிழ் மரபினர், வேந்தன் மரபினர், மருத
நிலத்தவர், மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள். இந்த வரலாற்று உண்மையைக் கல்வெட்டுச்
சான்றுகள், பட்டயச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் வரலாற்றுச் சான்றுகள்
ஆகியவற்றைக் கொண்டு ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

உலகமயமாக்கம்,
தாராளமயமாக்கம் ஆகியவற்றின் விளைவாக பூர்வீகக் குடிகளின் இன அடையாளங்கள்
மறைக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற மீளாய்வுகள் தங்கள் இன அடையாளங்களை மீட்டு
கொணர்கின்றன / முன் நிறுத்துகின்றன. பெண்ணியம், மார்க்சியம், மள்ளரியம் போன்றவை
சமூக விடுதலைக்கானவை. அந்த வகையில் மள்ளரியம் தமிழ்த் தேச விடுதலைச் சங்கிலியில்
ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. நூலாசிரியர் முனைவர் தே. ஞானசேகரன்
அவர்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணி செய்து
வருகிறார். தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர், மள்ளரியத் தத்துவவியலாளர்.

குறிப்பு

“பள்ளு இலக்கியங்கள் பிறரால் இயற்றப் பட்டதா? அல்லது உழவர்,
உழத்தியரது வாய்ப்பாட்க்கள் தானா? பள்ளு இலக்கியங்கள் பள்ளர்களை
இழிவுபடுத்துவதற்காக இயற்றப்பட்டனவா? அல்லத் அவர்தம் பெருமைகளைப் பேணுவதற்காகத்
தோற்றம் பெற்றனவா? இவை நாயக்கர் ஆட்சியில் சோற்றுவிக்கப்பட்டனவா? அல்லது
தொல்காப்பியம் கூறும் என் வகை வனப்புகளில் ஒன்றான புலன் என்னும் அழகுடைய
பாடல்களிலிருந்து தோற்றம் பெற்றதா? என்பது குறித்து மீளாய்வு செய்யப்படல்
வேண்டும்”.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s