மள்ளர் வரலாறு

Ajit Mullar ‘தை’ முதல் நாளை புத்தாண்டின் முதல் நாளாகக் கொண்டாடச் சொல்கிறது அரசு. நமக்கு அதில் மாறுபாடில்லை. தமிழர் வரலாற்றில் பொங்கல் நாள், உழவர் நாளாகவே இருந்து வந்திருக்கிறது. உழவர் நாள், ‘மள்ளர்’ நாள் என்றால் அது இன்னும் கூடுதல் பொருத்தமாகவே இருக்கும்.

மள்ளர்களைப் பள்ளர்கள் என்று பிற்கால, நாயக்கர் காலத்துச் சிற்றிலக்கியங்கள் சொல்கின்றன. சுமார் 400 பள்ளு இலக்கியங்கள், பள்ளர் குலம் பற்றி எழுதப்பட்டுள்ளன. சங்க காலத்தில் இன்று பள்ளர் என்று தவறாகக் கூறப்படும் மக்களுக்கு, ‘மள்ளர்’ என்ற பெயரே இருந்திருக்கிறது. அண்மைக்காலமாக இந்த மக்கள், தங்களை தேவேந்திர குல வெள்ளாளர் என்று அழைத்துக்கொள்கிறார்கள். அழைக்கப்படுகிறார்கள். அதன் வரலாற்றை ஆராய்வோம். தமிழர்கள், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்கள். தங்கள் வாழ்நிலங்களை நான்கு வகையாகப் பிரித்தார்கள். மலை மற்றும் மலைசார்ந்த நிலப்பரப்பைக் குறிஞ்சி என்று அழைத்தார்கள். அந்த நிலத்தில் மலரும் பூக்களில் சிறப்பு பொருந்தியது குறிஞ்சிமலர். மலையைவிட்டு, வாழ்வாதாரம் தேடிக் கீழே வந்தவர்கள், காட்டுப்பகுதியைக் கண்டடைந்தார்கள். அந்நிலத்துச் சிறந்த பூவின் பெயரால் அது முல்லை என்றாயிற்று. கடற்கரை மக்கள், தங்கள் பகுதிக்கு அந்நிலத்து நெய்தலைக் கண்டு, அதற்கு நெய்தல் நிலம் என்று பெயர் கொண்டார்கள்.

காட்டை அடுத்துள்ள, சமதளமும், ஆற்றங்கரைக்கு அழகாகவும் உள்ள பூமியை அங்கே அடர்ந்து வளர்ந்துள்ள மருத நிலத்தின் பெயரால் வழங்கினார்கள். ஆற்றுப் பாசனத்தின் உதவியுடன், நெல் விவசாயத்தை மருத நிலத்துக்குக் குடி பெயர்ந்தவர்கள் கண்டுபிடித்தார்கள். மனித குல முன்னேற்றத்தைச் சாத்யமாக்கியது மூன்று கண்டுபிடிப்புகள். முதலில் நெருப்பு, இரண்டாவது சக்கரம், மூன்றாவது விவசாயம். நிலத்தை உழுது நெல் விதை தூவப்படுவதால், அதைச் செய்தவர்கள் உழவர்கள் எனப் பெயர் பெற்றார்கள். விவசாயத்துக்குச் செயற்கை மற்றும் ரசாயன உரங்களைக் கொடுத்து நிலங்களை அழிக்கும் அரசுகள் அந்தக்காலத்தில் இல்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஒரு மணி நெல், பத்து மணிகளைத் தந்தது. நெல்லை, நாணயமாகத் தந்து மீன் மற்றும் பலசரக்கு வாங்கிக் கொண்டார்கள். வயல் நண்டுகள், ஆமைகள், ஆடுகள், மான்கள் அவர்களின் உணவாயின.

நெல் விவசாயம், இன்றுபோல அறுபது, தொண்ணூறு நாள் அவசரப் பிண்டமாக இல்லை. ஏழு, எட்டு மாதப் பயிர்கள் அவை. சுமார் 35 அல்லது 40 வகை நெல் வகைகளை அவர்கள் அறிந்திருந்தார்கள். அந்த உழவர்கள், உலகுக்கு அச்சாணிபோல இருந்து உணவு வழங்கும் பெரும்பணியைச் செய்தார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் அல்லது கூட்டத்துக்கும் அவர்கள் உழைப்பினால், நிறைய நெல் மற்றும் மாடுகள் இருந்தன. மாடு என்றாலே, ‘செல்வம்’ என்று அர்த்தம், தமிழில். இந்தச் செல்வம் பகைக்குக் காரணமும் ஆயிற்று. விவசாயம் மற்றும் பால்வளம், மற்றும் இறைச்சி உணவுக்குக் காரணமாக மாடு பிடிக்கும் போர்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கூட்டம், மாடு பிடிக்கும் சண்டையில் இறங்க, மறுகூட்டம் மாடு மீட்கும் போரில் இறங்க, சண்டையும், சச்சரவும், தினவாழ்க்கை ஆயிற்று. ஆகவே, உழவர்கள் தங்கள் உடமைகளைக் காத்துக்கொள்ள போர் வீரர்களாகவும் மாற வேண்டி இருந்தது. அந்த வகையில் உருவான உழவு வீரர்களே மள்ளர்கள் எனப்பட்டார்கள்.

‘மள்ளர்’ என்றால் திண்மை (பலம்) உடைய போர்வீரர்கள் என்று விளக்கம் சொல்கின்றன நிகண்டுகள் என்று சொல்லப்பட்ட பழைய அகராதிகள்.

‘அருந்திறன் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் மள்ளர்…’ என்று பெயர் என்கிறது திவாகர நிகண்டு. இதைவிடத் தெளிவாகப் பிங்கல நிகண்டு, ‘செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்’ என்கிறது.

இந்தப் போர் வீரர்களில், அதாவது மள்ளர்களில், எல்லோரையும் தன் வீரத்தால் வென்ற பெரிய போர்வீரன், ‘வேந்தன்’ எனப்பட்டான். அவன் மரியாதைக்குரிய மன்னன் ஆகிறான். ‘மள்ளன்’ என்பதே ‘மன்னன்’ ஆகி இருக்கவும் வாய்ப்பு உண்டு. அந்த ‘வேந்தன்’, பின்னால் வந்த மள்ளர்களால், உழவர்களால் வணங்கப்பட்டவனாகிறான். ‘வேந்தன்’, குல முதல்வனாகி, காக்கும் தெய்வமாகவும் ஆகிறான். இதையே தொல்காப்பியம், ‘வேந்தன் மேய தீம்புவை உலகம்’ என்று இலக்கணம் வகுக்கிறது. ‘மேய’ என்பதுக்குத் தகுதியான என்று பொருள். ஆக, மருத நிலத்துக்குத் (தீம்புவைஆற்றங்கரை நிலம்) தகுதியான ஆட்சியாளன் ‘வேந்தன்’ என்கிறது தமிழ் இலக்கணம். இந்த வேந்தர்களின் பரம்பரையே சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள். ‘வேந்தன்’ என்ற சொல்லை இந்த மூன்று பேர் மட்டுமே பெற்றவர்களாகத் தமிழ் இலக்கியத்தில் விளங்குகிறார்கள்-. மற்றவர்கள் ‘வேளிர்’, ‘மன்னன்’, ‘கோ’ என் பெயரிலும் ‘அரசன்’ என்ற பெயரால் மட்டுமே அறியப்பட்டிருக்கிறார்கள்.

‘வேந்தர்’ என்ற சொல், பழைய பெரு மன்னர்களாகிய சேர, சோழ, பாண்டியர்களையே குறிக்கும். இவர்கள் மள்ளர்களிடையேதான் உருவாகி வந்தவர்கள்.

நம் உழவர்ப் பெருங்குடியினராகிய மள்ளர்கள், தேவேந்திரர் எனவும் தேவேந்திர குல வேளாளர் எனவும் குறிப்பிடப்பட என்ன காரணம்?

யார் இந்த தேவேந்திரன்?

ஆரியர்களின் ஆதிக் கடவுள் இந்திரன். அவர்களின் முதல் வேதமாகிய ரிக் வேதத்தில் முப்பது சதவிகிதம் இந்திரன் பற்றிய பாடல்களே ஆகும். ‘எங்களுக்குச் சோறு கொடு, சுராபானம் (சாராயம்) கொடு, எங்கள் எதிரிகளை அழி என்று கேட்டுக்கொள்ளும் பாடல்கள் அவை. இந்திரன், புராணங்களின் படி தேவர்களின் கடவுள். காசிப முனிவரும், அதிதி தேவியும் அவன் பெற்றோர். அவன் மனைவி இந்திராணி. ஆயுதம் வச்சிரம். இந்திரன் பற்றிய வேறு நல்ல தகவல்கள் புராணங்களில் இல்லை. ஆனால், ஆரியர்களின் ஆதி இலக்கியங்களில் அவன் ஒப்பற்ற கடவுளாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேலே, அவன் மழை, இடி, மின்னல் ஆகியவைகளின் கடவுளாக இருக்கிறான். ஆக, ஆரியர்களின் மழைக் கடவுள் இந்திரனே ஆவார்.

உழவுக்குக் கடவுள் மழையே. தமிழ் மரபில் மழைக் கடவுளாக வேந்தன் இருந்திருக்கிறான். விவசாயம் சார்ந்த சடங்குகளுக்குக் கடவுளும் வேந்தனாகவே இருந்திருக்கிறான். ஆரியக் கலப்பு, தமிழ் பூமியில் ஏற்பட்டு இந்து மதம் கட்டமைக்கப்பட்டபோது, தமிழ் வேந்தனும், ஆரிய தேவவேந்திரனும் ஒன்றிணைக்கப்படுகிறான். தமிழ் முருகனும், வட நாட்டு சுப்பிரமணியனும் ஒன்றிணைந்தபோது, இதுவும் நடந்தது. தமிழ்க் கொற்றவை, சிவனுக்குச் சக்தியாக மாற்றப்படும்போது இதுவும் நடந்திருக்கிறது. ஆக, மள்ளர்களான உழவர்களுக்கு ஆதிக் கடவுள் வேந்தன், பிறகு தேவேந்திரானாகி(தேவ+ இந்திரன்), அவன் வெள்ளாமைக்குக் கடவுளாகி, வெள்ளாமை செய்த உழவர்களான மள்ளர்கள், அவன் நினைவில் தேவேந்திர குல வெள்ளாளராகிறார்கள். பெயர்கள் எதுவானாலும், அவர்கள் பூர்வ, பழைய தமிழர்கள். உழவர்கள். வேளாண்மை செய்தவர்கள்.

வேந்தனாகிய இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவே, அவன் மழை தந்தமைக்காகப் போகித் திருநாள் கொண்டாடுகிறோம். ‘போகி’ என்ற பெயர் இந்திரனுக்கு உண்டு. தேவலோகத்துப் போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவிக்கிறவன். அதனால் இந்திரனுக்குப் போகி என்று பெயர். அறுவடைக்கு முந்தைய நாள் இந்திரனுக்கு நன்றி கூறும் நாள். அதுவே போகி.

மறுநாள் பொங்கல் என்று இன்று நாம் சொல்லும் நாள், அறுவடை நாள் ஆகும். புதிய மகசூலைப் பொங்கலாக்கி, சூரியனுக்குப் படைக்கும் நாள், பொங்கல் நாள் ஆகும். ஒரு பக்கம் அறுவடை மறுபக்கம் புது உழவுக்குத் தொடக்க நாளும் ஆகும். வேந்தன் நெறிப்பட்ட தமிழர் மழை வணக்கமும், வேத நெறிப்பட்ட இந்திர வணக்கமும் ஒன்றையொன்று கலந்து, இந்திர விழாவில் முடிந்தன. சங்க காலத்தில் அறிமுகமான இந்திரன், மரியாதைக்குரிய மழைக் கடவுளாக மாறச் சுமார் முந்நூறு ஆண்டுகள் தேவைப்பட்டது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலமான 1800 ஆண்டுகளுக்குப் பிந்தைய (கி.பி.2ம் நூற்றாண்டு) கால அளவில் இந்திர வணக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் வேர் ஊன்றியது. இந்திரவிழா பற்றிச் சிலம்பிலும், மணிமேகலையிலும், சான்றுகள் இருக்கின்றன. மள்ளர் ஆட்சி சிறக்கவும், பசி, பிணி, பகை நீங்கவும் இந்திரனுக்குப் பலிகொடுத்துப் பூசிக்கும் வழக்கம் உருவாயிற்று. கோவலன் மாதவி பிரிவே, ஒரு இந்திர விழாவில்தான் நடந்திருக்கிறது.

சங்க காலத்துக்கும் முந்தைய தமிழ் உழவர்களாகிய மள்ளர்கள், பழந்தமிழ் வேந்தன் காலத்திய சடங்குகளை இன்னமும் விடாது செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அச் சடங்குகளில் ஒன்று நாற்று நடவுத் திருவிழா. இது மள்ளரிய நாகரிகத்தின் ஒரு முக்கியச் செயல்பாடு. இந்திர விழாச் சடங்குகளில் இதுவும் ஒன்றாகக் காணப்பட்டாலும், நாற்று நடவுத் திருவிழா சுத்தமான தமிழர் சடங்காகும். வேத நெறியில் விவசாயம் சிறப்பிடம் பெற்றதாக வரலாறு இல்லை.

‘மள்ளரியம்’ எனும் பண்பாட்டுச் சொல்லை உருவாக்கிய அறிஞர் முனைவர் தே.ஞானசேகரன், இதுபற்றிப் பல நூல்கள் எழுதி இருக்கிறார். அவைகளில் இருந்து சில குறிப்புகள் தருகிறேன்.

நாற்று நடவுத் திருவிழா மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா ஆகிய அந்தப் பிரிவுகள்.

நாற்று விடும் விழா என்கிற விதை இடும் விழா, ஆனி மாதம் 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. முன்னரே பதப்படுத்தப்பட்ட கழனியில் நெல் விதைகளைப் பரவுதல் நாற்று உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. முதலில் நெல் விதையை ஊற வைத்து முளைக்க வைக்கும் சடங்கு நிகழ்த்தப்படுகிறது. விதை நெல்லை ஊற வைக்க ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்படுகிறது. இது அவர்கள் ஆற்றங்கரை மனிதர்கள் என்பதை நிரூபிக்கும் பழைய ஆதாரம். ஒரு சணல் சாக்கில் நெல் விதைகளைப் போட்டுக் கட்டி, அண்டாவில் போட்டு தண்ணீருக்குள் மூழ்க வைத்து, மறுநாள் முளைத்தவுடன் எடுத்து வைத்துவிடுவது விதை நெல் முளைக்க வைக்கும் சடங்காகும்.

பொன்னேர் பூட்டு விழாவும், நாற்று நடவுத் திருவிழாவும் ஆனி 14ம் நாள் தொடங்கி, 23ம் நாள் முடிகின்றன. கோயில் குருக்கள் பொன்னால் ஆன நாற்றை நட, மள்ளர் இன மக்கள், ஊர்த் தலைவர்கள் நாற்று நடவைத் தொடங்குகிறார்கள். இவைகள் எல்லாம் சுத்தமான தமிழ்ச் சடங்குகளாகும். மட்டுமல்ல சுமார் மூவாயிரம் ஆண்டுகாலத் தமிழர் விவசாயத் தொல் வழக்கத்தை இன்னும் மள்ளர்கள் கைக் கொண்டிருப்பதைக் காட்டும் சடங்கும்கூட. பழந்தமிழ் சமூக எச்சம் ஒன்று இன்றும் ஜீவித்திருக்கிறது என்பதை இந்த மள்ளர் பெருமக்களின் சடங்குகளில் இருந்தே காணமுடிகிறது.

சரி. மிகப் பெரும் வழக்கத்திலிருந்த இந்திர வணக்கம், தமிழர் வாழ்வில் ஏன் மறைந்து போனது? சைவ, வைணவம்போல் அது நீடிக்காமைக்கு என்ன காரணம்? மேலும், நெல் விவசாயத்திற்கும் மள்ளர் என்கிற தேவேந்திரர்களுக்கும் உள்ள உறவு எத்தகையது-?

சரித்திரம் தொடர்கிறது…

பிரபஞ்சன்

10 thoughts on “மள்ளர் வரலாறு

  1. மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும் இவர்கள்17ம் நூற்றாண்டில் சில வேசி மரபினர்களால் தந்திரமாக பள்ளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதற்கே என்பதனை வரலாற்றுலக வல்லுனர் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

  2. மீனாட்சி அம்மன்கோவிலுக்கு உள்ளே அரிஜனங்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்று வைத்தியநாத அய்யர் திட்டமிடுவதைத் தடுப்பதற்கு ரவுடிகள் தயாராகி விட்டார்கள் என்ற செய்தி வந்தபோது, பசும்பொன் தேவர் திருமகனார் ஒரு அறிக்கையை துண்டு அறிக்கையாக அச்சிட்டு மதுரையில் வெளியிட்டார்.

    தேவரின் எச்சரிக்கை

    அந்த அறிக்கையில் குறிப்பிட்டார்:

    ‘மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வைத்திய நாத அய்யர் அரிஜனங்களை அழைத்துக் கொண்டு போவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். ஆனால், அதேநேரத்தில் சனாதனிகள் ரவுடிகள் கூட்டத்தை ஏற்பாடு செய்து, கலவரம் விளைவிப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக நான் கேள்விப்படுகிறேன். வைத்தியநாத அய்யரோடு அரிஜனங்கள் உள்ளே நுழைவார்களானால், அவர்களைப் படுபயங்கர மாகத் தாக்கி, அங்கயற்கண்ணி ஆலயத்தை இரத்தக்களரியாகச் செய்வதற்குத் திட்டமிட்டு இருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. சனாதனிகள் ஏற்பாடு செய்து இருக்கிற ரவுடிகளை எச்சரிக்கிறேன். வைத்தியநாத அய்யர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே வருகிறபோது, அடியேனும் வருவேன். அவர்கள் திட்டமிட்டபடி கலவரம் செய்ய வருவார்களானால், அந்த ரவுடித்தனத்தைச் சந்திக்க வேண்டிய விதத்தில் நான் சந்திப்பேன்.

    இது தேவர் திருமகனாரின் துண்டு அறிக்கை. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் உலவுவதற்கு பல பேர் ஏன் விரும்பவில்லை?

  3. தருமபுரி கலவரம்: கட்டுக்கதைகளும் உண்மையும்

    தருமபுரி கலவரம் தொடர்பில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன.
    1. வன்னியர்களே கலவரம் செய்தனர், 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர், 3. காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான், 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் ஒரு குடிகாரர், அவர் கொலை செய்யப்பட்டார், – இப்படி பலக் கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை உண்மையாகவும் காட்டப்படுகின்றன. இதற்கெல்லாம் பதில் சொல்லப்பட வேண்டும்.
    கட்டுக்கதை: 1. வன்னியர்களே கலவரம் செய்தனர். வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல். உண்மை: தருமபுரி கலவரத்தில் தொடர்புடையவர்கள் எனக் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாயடுக்கள் (13 பேர்), செட்டியார்கள் (7 பேர்), . மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இசைவேளாளர் (5 பேர்), பழங்குடியினத்தைச் சேர்ந்த குறும்பர்கள் (3 பேர்)ஆகியோரும் உள்ளனர். பல்வேறு சாதியினரும் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டும், கைதுகளும் நடைபெற்றுள்ள நிலையில் இதனை “வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையே மோதல்” என்று வருணிப்பது வன்னியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடன்றி வேறில்லை.
    கட்டுக்கதை: 2. பாமகவினர் மட்டுமே கலவரம் செய்தனர். உண்மை: பாமகவினர் மட்டுமே கலவரத்தில் ஈடுபட்டனர் என்பது அயோக்கியத் தனமான் குற்றச்சாட்டு. தற்கொலைச் செய்துகொண்ட நாகராஜன், நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியைச் சேர்ந்தவர். இக்கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்களில் அதிமுகவின் பஞ்சாயத்து தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், திமுகவின் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் எனப் பல கட்சியினரும் உள்ளனர். கைதானவர்களில் அதிக அளவில் 17 பேர் அதிமுகவினர். கைதானவர்களில் அதிமுக மட்டுமில்லாமல் தி.மு.க (16 பேர்), ம.தி.மு.க (5 பேர்), தமிழக விவசாயிகள் சங்கம் (12 பேர்), பா.ம.க (10 பேர்), தே.மு.தி.க (7 பேர்), கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சியினரும் உள்ளனர். எனவே இதனை பா.ம.க நடத்திய தாக்குதல் எனக் கூறுவது சிலருடைய குறுகிய அரசியல் நோக்கமே. குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே பாமகவினர். அப்படியிருக்கும் போது – ஏதோ பாமகதான் வன்முறைக்கு காரணம் என்று கூறுபது ஏன்? பாமக மட்டுமே வன்னியர்களுக்காகப் பேசுகிறது. அந்த ஒருகுரலையும் நசுக்கிவிட வேண்டும் என்கிற சதிதான் இதன் பின்னணி என்பதைத் தவிர இதில் வேறேதும் இல்லை.
    கட்டுக்கதை: 3. நடந்த காதல் திருமணம் ஒரு சட்டப்படியான திருமணம்தான் உண்மை: இது ஒரு அப்பட்டமான பொய். நடந்திருப்பது சட்டவிரோதமான ஒரு குழந்தைத் திருமணம். ஏனெனில், திருமணம் செய்துகொண்ட இளவரசன் இன்னமும் சட்டபூர்வமான திருமண வயதான 21 ஐ எட்டவில்லை. அவருக்கு இப்போது 19 வயதுதான் ஆகிறது. இளவரசனின் பிறந்த தேதி 3.3.1993. அப்படியிருக்கும் போது, அவர் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக சிலரும், பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக உண்மை அறியும் குழுக்களும் கூறுகின்றன. ஒருவேளை அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருந்தால் அது சட்டத்தை ஏமாற்றிய நிகழ்வாகும். இளவரசனின் மாற்றுச் சான்றிதழ் – பிறந்த தேதி: 3.3.1993 (வயது 19) இப்படி சட்டப்படி திருமண வயதை எட்டாத ஒருவருக்கு திருமணம் செய்வதை காவல்துறையினர் எப்படி அனுமதித்தனர்? இதற்கான பஞ்சாயத்துகளை அவர்கள் எப்படி முன்னின்று நடத்தினர்? என்பது வியப்பளிக்கிறது. இளவரசனின் திருமணம் சட்ட விரோதமானது என்பதால், கலவரம் நியாயமானது என்று ஆகிவிடாது. சட்டவிரோதமான இந்தத் திருமணம் தடுக்கப்பட்டிருந்தால் இந்த கலவரம் நேர்ந்திருக்க வாய்ப்பில்லையே என்பதுதான் நமது கருத்து.
    கட்டுக்கதை: 4. தற்கொலை செய்துகொண்ட நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கலாம். உண்மை: இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத் தனமானக் குற்றச்சாட்டு. தேமுதிகவில் உறுப்பினராக இருந்த நாகராஜன் ஒரு கவுரவமான குடிமகனாகவே இருந்திருக்கிறார். அவர் காவல் நிலையைத்தில் ஒரு காவல்துறை உதவி ஆய்வாளரால் தாறுமாறாக அவமானப் படுத்தப்பட்டதாலேயே தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதனை அவரது மனைவியும் உறுதி செய்கிறார். இது தொடர்பான வழக்கில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. கலவரத்திற்கு உண்மைக் காரணம் என்ன?
    தருமபுரி கலவரம் என்பது இரு சாதிகளுக்கு இடையேயான கலவரமோ, இரு கட்சிகளுக்கு இடையேயான கலவரமோ அல்ல. தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத மக்களுக்கும் இடையே பகை உணர்ச்சி அங்கு வளர்ந்து வந்துள்ளது. அதற்கு பலக்காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக “கட்டாயக் காதல் – கலப்பு – நாடகத் திருமணங்கள்” நடத்தப்படுவதாக, தமிழ்நாட்டில் பல சமூகத்தவரிடையே மனக்கசப்பு உருவாகியுள்ளது. இதுவே, பல இடங்களில் சமுதாய மோதல்களுக்கு வழிவகுக்கிறது. காதல் திருமணங்கள் தவறு என்று கூற முடியாது. ஆனால், சாதி ஒழிப்பு என்பதை ஒரு நோக்கமாக வைத்து கட்டாய காதல் திருமணங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுமானால் – அவையும் மனித உரிமைகளுக்கு எதிரான நிகழ்வுகளே ஆகும்

  4. தமிழகத்தின் தொல் முதுகுடியைச் சேர்ந்தவர்கள் கள்ளர்கள் ஆவார். இவர்களைப் பற்றி பல அறிஞர்கள் பலவாறான கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

    முடியுடை மூவேந்தருள் சோழர்கள் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளனர். மு. சீனுவாச அய்யங்கார் சோழரை சாதியில் கள்ளர் என்றும் பாண்டியரை மறவர் என்றும் குறிப்பார்.

    வின்சன் ஸ்மித் எனும் வரலாற்று அறிஞர் கள்ளரையும், பல்லவரையும் இணைத்துக் கூறுவார்.

    சர்.வால்டர் எலியட் கள்ளர்கள்களை கலகத் கூட்டத்தார் என்றும் அவர்கள் ஆண்மை, அஞ்சாமை, வீரம் முதலிய பண்பு மிக்கவர்கள் என்பார்.

    கள்ளர்கள் நாகர் இனத்தவர் என்று அறிஞர் வி. கனகசபை பிள்ளை அவர்களும் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கூறுவர்.

    கள்ளர்கள் தமிழகத்தின் வீரமிக்க தனித்தமிழ்த் தொல் குடியினர் என்று மொழி ஞாயிறு பாவாணர் கூறுவார்.

    • மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து சேர சோழ பாண்டிய மன்னர்களும் மள்ளர் மரபினரே.
      மீண்டும் மீண்டும் கூறுகிறேன் அக்காலத்தை இக்கால கண்ணாடி போட்டு பார்க்காதீர்கள். *தேவர் என்பது பட்ட பெயர்.சாதி பெயர் அல்ல.* தேவர்
      பட்டமானது மல்லர்களுக்குரியது. சேர சோழ பாண்டியர் , ஆரிய- தெலுங்கர் மற்றும்
      கள்ளர் கூட்டணியால் முற்றாக வீழ்ந்த பின் , தேவர் எனும் மள்ளர்களுக்கான
      பட்டத்தை கள்ளர்கள் எடுத்துக்கொண்டனர் என்பது இன்றைய வரலாற்று ஆசிரியர்
      அனைவருக்கும் நன்றாகவே தெரியும். *உலகின் எந்த ஒரு கல்வெட்டிலோ அல்லது சங்க
      இலக்கியங்களிலோ எந்தவொரு சேர சோழ பாண்டிய மன்னனும் கள்ளர் என்று குரிக்கப்பட்டிருக்கவில்லை மாறாக அனைவரும் மள்ளர் இனத்தவர் என்றே
      குறிப்பிடப்பட்டுள்ளனர்.* *மேலும் தேவர் என்கிற பட்டமும் கள்ளர்களுக்கு வழங்கப்பட்டதர்க்கான எந்த ஒரு சான்றும் இல்லை.* ஆக தற்போது குல உயர்வு கருதி
      கள்ளர்-மறவர் என்போர் தேவர் என தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்கின்றனர்.
      தஞ்சையில் இருக்கும் பிரமலைக்கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாது.
      தேவர் என்று சான்றிதல் வேண்டுமென கள்ளர் மற்றும்மறவர்கள் 2006 – இல்
      கேட்கப்பட்டபோது அதை முதலில் எதிர்த்தவர்கள் தஞ்சை கள்ளர்கள் தான். *தென்
      தமிழகத்தின் தெற்கத்தி கள்ளர்களே தங்களை தேவர் என அழைக்க முற்படுகின்றனர்.*> சேர சோழ பாண்டியரை மரபு கொண்டே அறிய முடியுமே தவிர உறவு கொண்டு அறிய
      முடியாது என்பது கூட உங்களுக்கு தெரியாமல் போனது வேடிக்கைதான். கரிகால்
      பெருவளத்தான் மள்ளர் மரபினன் என கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன.
      அப்படியேதான் ராஜா ராஜா சோழனையும் குறிப்பிடுகின்றனர். இதையெல்லாம் பக்கத்தில்
      உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு வந்தால் தான் அறியமுடியும என்ன?!. களபிரர் படையெடுப்பில் சோழ படையின் சில பிரிவுகள் இன்றைய ஆந்திர நிலப்பரப்பில்
      குடிபோனது உண்மைதான். அதற்காக சோழ மரபினர் சோழ நாட்டிலிருந்து முற்றிலும்
      அழிந்தோ அல்லது அகன்றோ விட்டனர் அல்ல.அதனால் தான் கடுங்கோன் பாண்டியனால்
      மீண்டும் தமிழகத்தை மீட்ட்க்க முடிந்தது.> ராஜா ராஜன் ஆரியர்களை கோவிலில் நடனமாடவும் , தேவதாசி முறைக்காகவும் தான் கூட்டி வந்தானே தவிர தம் மக்களை அடிமைப்படுத்துவதர்க்காக அல்ல. இது ராஜா
      ராஜா சோழன் செய்த தவறுதான் , இல்லையென்று கூறுவதற்கில்லை. அதே நேரம்
      தற்காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை தற்கால நடைமுறை கொண்டே நாம் இங்கு அணுகுவோம்.
      இன்று தமிழகத்தில் உ . முத்துராமலிங்கம் , தெலுங்கு கட்டபொம்முலு மற்றும் சிலதியாகிகளுக்கு(!!!!) அரசு விழா எடுக்கையில், ராஜா ராஜன் போன்ற தஞ்சை பெறுடையார்
      கோவில் கட்டிய , குடமுழக்கு முறை கண்ட , மழை நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை கண்ட தமிழனுக்கு அரசு விழா எடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?. இன்று
      ராமநாதபுரம் முத்துராமலிங்கம் குருபூஜை, சென்னை நந்தனம் சிலை மற்றும்
      தமிழகத்தின் பிற இடங்களில் உள்ள முத்துராமலிங்கம் சிலைகள் அனைத்துமே ஒவொரு
      தமிழனில் வியர்வைத்துளியில் இருந்து பெறப்பட்ட மக்களின் வரிப்பணத்தில் இருந்து
      நிறுவப்பட்டவை. இதையெல்லாம் எவன் அப்பன் வீட்டு சொத்தை எடுத்து இவர்கள்
      செய்கிறார்கள்?. இதையெல்லாம் கண்டிக்க கூட உங்களுக்கெல்லாம் முதுகெலும்பில்லை.
      ஆனால் வெட்டி நியாயம் பேசவந்துவிடுகிறீர்கள்.FROM SRILANKAN MALLAR FEDERATION

  5. முக்குலத்து மக்களின் சொந்த நிலங்களில் விவசாய கூலியாகவும்,தேவரின மக்களின் வீட்டில் பண்ணை ஆட்களாகவும், மள்ளர்(பள்ளர்) இன மக்கள் பணி புரிந்து வந்தவர்களை, சில சுயநல அரசியல்வாதிகள் தனது அரசியல் லாபநோக்கிற்க்காக தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர். அதை அறியாமேலே அவர்களும் தங்களது இயல்பான சந்தோச தருணங்களை இழந்து, வேறெங்கோ பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை அவர்களாகவே சுய உணர்தல் ஏற்பட்டு அந்த மாயைகளிலிருந்து வெளிவந்தால் மட்டுமே மீண்டுமொரு மிகப்பெரிய சாதீய மோதல் ஏற்படமால் இருக்க ஒரே வழி!

    • கள்ளர் என்போர் ஒரு வழிப்பறிக்கும்பலாக காலம் காலமாக இருந்தது என்பது அனைவரும் அறிவர்.தீய பழக்கம் அனைத்தும் கொண்ட அதாவது குழி பறித்தல்,கூட்டிகொடுத்தல்,முடிச்சவிழ்த்தல் போன்ற அனைத்தையும் ஆரியர்களின் பழக்கம் அனைத்தும் கொண்Dஅ இவங்க மன்னரினமாக்கும்…..????முக்குலத்தோர்னு இப்ப சொல்லுற இந்த கிரிமினல்ஸ் மன்னர் காலத்தில் எங்க போனாங்களாம்..!கேப்பையில் நெய் வடியுதுன்னா கேக்கிறவன் கேணையா இருக்கனும்…தேவேந்திரர் இல்ல.!
      ராஜஸ்தான் பகுதிக்ள்ல இருந்து ராமேஸ்நரம் வந்த முக்குலம் இப்ப மண்ணின் மைந்தன்…மன்னர் மைந்தன்னு அரசு அதிகாரங்கள் தெலுங்கு அரசாட்சிக்கு பின் தங்களை மேலேத்திக்கிட்டு இருக்குறதை பாத்துக்கிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க.!கள்ளர் என்போர் ஒரு வழிப்பறிக்கும்பலாக காலம் காலமாக இருந்தது என்பது அனைவரும் அறிவர்.தீய பழக்கம் அனைத்தும் கொண்ட அதாவது குழி பறித்தல்,கூட்டிகொடுத்தல்,முடிச்சவிழ்த்தல் போன்ற அனைத்தையும் ஆரியர்களின் பழக்கம் அனைத்தும் கொண்Dஅ இவங்க மன்னரினமாக்கும்…..????

    • மள்ளர் என்றால் உயர்குலத்தவர் எனப்பொருள்படும் இவர்கள்17ம் நூற்றாண்டில் சில வேசி மரபினர்களால் தந்திரமாக பள்ளர் எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது இவர்களின் உண்மை வரலாற்றை மறைப்பதற்கே என்பதனை வரலாற்றுலக வல்லுனர் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்

raja -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி