தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம்.

1759 நவம்பர் 6ஆம் நாள் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வல் கோட்டையை கூலிப்படைத் தளபதி கான்சாகிப் தாக்கினான். 18 பவுண்டு வெடிகுண்டுகளைக் கொண்டு தாக்கியும் ஒரு பக்க கோட்டைசுவரில் ஒரு விரிசலை தவிர ஏதும் ஏற்படுத்த இயலவில்லை கான்சாகிப்புக்கு. ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக முற்றுகையிட்டு தமது கூட்டணி படைகளில் 400க்கும் மேற்பட்டவர்களை இழந்து 1760 ஜனவரியில் சென்னை திரும்பிய கான்சாகிப், வீரத்தால் வீழ்த்த முடியாத பூலித்தேவரை துரோகத்தாலும் வஞ்சகத்தாலும் வீழ்த்த திட்டமிட்டான்.

துரோகிகளுக்கா பஞ்சம்! நடுவக்குறிச்சி பாளையக்காரனை கைக்குள் போட்டுக்கொண்டான். இவர்கள் பூலித்தேவரின் வீரர்களுக்குப் பணத்தாசை காட்டித் தம் கூட்டணிக்கு இழுத்தனர். மீண்டும் துரோகிகளை நம்பி கான்சாகிப் படையினர் பூலித்தேவரைத் தாக்க வந்து நெற்கடான் செவ்வலை அடுத்திருந்த ஒரு காட்டுப் பக்கமாக கூடாரங்கள் போட்டு ஒளிந்திருந்தனர். இதை அறிந்த பூலித்தேவரின் வீரர்கள் சென்று இந்த துரோக கோழைக் கும்பலைத் தாக்கலாயினர்.

பூலித்தேவரின் முக்கிய தளபதி வெண்ணிக்காலாடி என்பவர் ஆவார். இவர் தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்துதித்த வீரத்திலகம். கான்சாகிப் ஒரு மேட்டுப்பகுதியை கோட்டையை தாக்க ஏற்றது போல உருவாக்கிக் கொண்டிருந்தான். தளபதி வெண்ணிக்காலாடி சில நூறு வீரர்களுடன் இந்த கான்சாகிப் படையை தாக்கினார். கடும் போர் நடந்தது. அப்போது மறைந்திருந்த கும்பினிக்காரன் வெண்ணிக்காலாடியின் வயிற்றில் குத்தினான். வயிறு கிழிந்து வெண்ணிக்காலாடியின் குடல் வெளியே தொங்கியது.

vennilakadiவெண்ணிக்காலாடி சரிந்த தன் குடலை தம் கையால் உள்ளே தள்ளி தலைப்பாகையால் அதனை இறுகக் கட்டினார். பின்னர் பல கும்பனிக்காரர்களுக்கும் கான்சாகிப்பின் வீரர்களுக்கும் வீர சுவர்க்கத்தை அருளினார். வெற்றி முழக்கத்துடன் பகைவரைப் புறங்கண்டார். மீண்டும் தோல்வியுடன் ஓடினான் கான். வயிற்றைப் பிடித்தபடி வெற்றிச்செய்தியை பூலித்தேவருக்கு கூறிய பின்னரே அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது.

பின்னாளில் தமது மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வெள்ளையரும் ஆர்க்காட்டு நவாபும் சேர்ந்து தீ வைத்தபோது கூட கலங்காத மாவீர பூலித்தேவர், அவ்வீரத்திருமகனின் உடலை அணைத்து குமுறிக் குமுறி கண்ணீர் சிந்தினார்.

பார்துலங்க பூலிமன்னன் பேர்துலங்க -வெண்ணி
பாய்ந்தோடிச் சண்டைகள் போட்டானே
பரங்கியர் தலைகளை வெட்டியே காலாடி
பாங்காய் குவித்திட்டான் மலைபோலே…

எத்தனை பட்டாளம் வெட்டினானடா- வெண்ணியை
எதிர்க்கவும் ஒரு ஆள்கூட இல்லையடா
செங்குருதி நனைத்து பூலித்தேவன் வண்ணச்
சீர்மிகு மேனியெல்லாம் கொப்பளிக்க…

காலாடி உயிருக்கோர் காலன் வந்திட்டான்
கால் நொடியில் காற்றாய் பறந்தானே…
பழிகள் பாவங்கள் வந்ததென்றெனக்கூறி
பார்வேந்தன் பூலித்தேவன் கதறியழ …  (பூலித்தேவன் சிந்து)

இது நடந்தது 1760 டிசம்பர் 20 இல்.

பூலித்தேவர் வெண்ணிக்காலாடிக்கு வீரக்கல் நட்டார். அவர் போரிட்டு வீரசுவர்க்கம் பெற்ற இடம் காலாடி மேடு என அழைக்கப்படுகிறது.Advertisements

8 thoughts on “தேவேந்திரகுல வெள்ளாளர் குலத்தில் உதித்த வீரத்திலகம்.

 1. யார் இந்த பூலித் தேவன்? இன்று தேவர்களால் சொல்லப் படும் அந்த பூலித் தேவனா? இந்த ‘தேவன்’ என்ற பதம் எதை சுட்டுகிறது?

   • அப்படியானால் தேவேந்திர குலத்தான், தேவனுக்கு அடியாள் வேலை பார்த்தவர்களா? தேவேந்திர குலத்தான் ஆண்ட பரம்பரை என்றால் தேவன் அல்லவா அவனுக்கு தளபதியாக இருந்திருக்க வேண்டும்?

   • நண்பரே எப்பொழுதும் வரலாற்றை படித்துப் பார்ப்பது தான் உங்களுக்கு சிறந்த பதிலை தரமுடியும்.
    நீங்கள் சொன்னவர்களெல்லாம் தேவேந்திரர்களின் இறுதி சாம்ராஜமான பாண்டிய சாம்ராஜ்ஜத்தை இசாமியர்களோடு,தெலுங்கு வடுகர்களோடு சேர்ந்து அழித்தவர்கள் தான்.அதற்ட்கு பிரதிபலனாக ஒரு சில பாளையப்பட்டு அவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப் பட்டது.சேதுபதிகளின் கீர்த்திப் பட்டயத்தில் “பாண்டியர்வளநாடு கொட்டமடம் அடக்கி” என்றிருப்பதை படித்துப் பாருங்கள்.நன்றி.

 2. நண்பரே எப்பொழுதும் வரலாற்றை படித்துப் பார்ப்பது தான் உங்களுக்கு சிறந்த பதிலை தரமுடியும்.
  நீங்கள் சொன்னவர்களெல்லாம் தேவேந்திரர்களின் இறுதி சாம்ராஜமான பாண்டிய சாம்ராஜ்ஜத்தை இசாமியர்களோடு,தெலுங்கு வடுகர்களோடு சேர்ந்து அழித்தவர்கள் தான்.அதற்ட்கு பிரதிபலனாக ஒரு சில பாளையப்பட்டு அவர்களுக்கு சன்மானமாக கொடுக்கப் பட்டது.சேதுபதிகளின் கீர்த்திப் பட்டயத்தில் “பாண்டியர்வளநாடு கொட்டமடம் அடக்கி” என்றிருப்பதை படித்துப் பாருங்கள்.நன்றி.

 3. களவுசெய்பவன் ஆட்சிகிடைத்தால் எதையும்செய்வான்.
  சற்றொப்ப இதே காலகட்டத்தில் தன்மப் பெருமாள் குலசேகரதேவன் என்றும் திருநெல்வேலிப்பெருமாள் என்றும் வெட்டும் பெருமாள் என்றும் அழைக்கப்பட்ட கோமாறவர்மன் ஸ்ரீவல்லபன் (சீவலமாறன்) தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார். இவருடைராமவர்மாவுக்கு உதவி புரிந்த “வன்னியர்” என்ற பட்டம் பூண்ட கள்ளர் குலப் பிரிவினரின் மூப்புக்கூறு ஆதிக்கம் ஏற்பட்டுவிட்டது எனப் பாளையப்பட்டுகளின் வம்சாவளி மூலம் தெரியவருகிறது.8 பெயரளவுக்காவது தமது அதிகாரத்தைக் காத்துக் கொள்வதற்காகத் தென்காசிப் பாண்டிய அரச வம்சத்தவர், கள்ளர்-மறவர் குலத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி அவர்களுடைய படைத்துணையை உறுதிப்படுத்திக் கொண்டனர். கோசடிலவர்மன் அழகன் பெருமாள் அதிவீரராமரான ஸ்ரீவல்லபதேவன், கி.பி. 1565ஆம் ஆண்டில் சாம்பவர் வடகரைச் சிவன் கோயிலின் ய ஆட்சிக் காலத்திலேயே தென்காசிப் பாண்டியர்கள், பலவிதமான மனச் சமாதானங்களுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொள்ள நேர்ந்தது. தலைநகரான தென்காசியிலேயே பூதலவீர பண்டாரக் கணக்கு, திருவாழிக் கண்காணி, திருமாலை ஆகியவற்றினை நிர்வகிப்பதற்கு உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் இராக்கதப் பெருமாள் கள்ளப்பிரான் சீவலக் காலிங்கராயனுக்குக் காணியாட்சி வழங்கினார்.9 இதே அரசன், கி.பி.1567இல் உலகு சிந்தாமணி வளநாட்டுக் கிடாரத்தூர் சீகையிலாசமுடையான் மறத்திரு வாணாதராய பெருமாளுக்குக் கிளாங்காட்டூர் ஆலயத் தர்மகர்த்தா கணக்குக் காணியாட்சி வழங்கினார்.10 இவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து வழங்கும் செயல்பாடே, கி.பி.17 ஆம் நூற்றாண்டில் சிவகிரி, ஊற்றுமலை, நெற்கட்டுஞ் செவல், தாருகாபுரம் போன்ற பாளையப் பட்டுகள் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பாளையப்பட்டுகளுள் சில சீவலமாறராசாவால் தமக்குப் பாளையப்பட்டு அதிகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடுவது இக்காரணத்தாலேயே ஆகும்.11 மட்டுமின்றி, கம்பளத்து நாயக்கர்கள், அனுப்பக் கவுண்டர்கள் போன்ற தெலுங்கு-கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட குலத்தவரும் சீவல மாற ராசாவுக்குத்தாம் படைத்துணை புரிந்ததற்குப் பிரதியுபகாரமாகச் சில அதிகாரங்களை அடைந்ததாகச் செப்பேடுகளில் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.12 தென்காசிப் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை விஜய நகர அரசர் அச்சுதராயர், தமது தாமிரவர்ணிக் கரை திக் விஜயத்தின் போது (கி.பி. 1530) மணம் புரிந்ததாகக் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.13 விஜயநகர அரசவம்சத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இத்தகைய மண உறவுகள் மூலம் பாண்டிய அரசின் வாழ்நாள் சிறிது காலம் நீடிக்க முடிந்தது. ஆயினும், 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் தஞ்சை நாயக்க அரசர் (கவறை நாயுடு குலப் பிரிவைச் சேர்ந்தவர்) இரகுநாதநாயக்கர், களாவதி என்ற பெயருடைய பாண்டிய குல இளவரசியை மணம் புரிந்தார், எனக் கி.பி. 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் செங்கல்வ காளகவி என்பவரால் இயற்றப்பட்ட “ராஜ கோபால விலாஸமு” என்ற தெலுங்கு இலக்கியத்தால் தெரியவருகிறது.14 களாவதி என்ற பெயர், கரிவலம் வந்த நல்லூர் இறைவனின் பெயராகிய “களாலிங்கர்” என்ற பெயருடன் தொடர்புடையதாகும். கரிவலம் வந்த நல்லூரைத் தலைநகராகக் கொண்டு வரதுங்கராம பாண்டியன் ஆட்சி புரிந்தார் என்றும், இவர் அதிவீரராம பாண்டியனின் சகோதரர் என்றும், கொக்கோக நூல் இயற்றியவர் என்றும் கருதப்படுகின்றன. கரிவலம் வந்த நல்லூர்க் களாலிங்கர் மீது “கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி” பாடியவர் இவரே என்று கருதப்படுகிறது. இந்நூல், குட்டித் திருவாசகம் என்றே புகழப்படும்.15 களாவதி, வரதுங்கராமனின் மகளாக இருக்கலாம். இவரே இரகுநாத நாயக்கரின் பட்டத்தரசியாவார். இரகுநாத நாயக்கர்க்கும் களாவதிக்கும் பிறந்த ராமபத்ர நாயக்கர் என்பவர் சோழநாட்டுக் கடற்கரைத் துறைமுக நகரங்களை கி.பி. 1630 வரை நிர்வகித்து வந்ததோடு, கடற்படையின் துணை கொண்டு இலங்கையின் யாழ்ப்பாண ராஜ்யத்திலும் அதிகாரம் செலுத்த முயன்றுவந்தார்.16 இவருக்கு இராமேஸ்வரம் பாண்டி நாட்டுக் கொற்கை போன்ற துறைமுக நகர்களுடன் தொடர்பிருந்ததாகக் ஊகிப்பதற்கு ஆதாரம் உள்ளது.17

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s