அரசகுல உரிமைகள்

பள்ளர்/மள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள்( சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் உட்பட) இலங்கை இந்தியா உட்படப் பல இடங்களில் உண்டு.ஆதலால் மள்ளர் குலத்தவர்கள் கண்டபடி அலட்டிக்கொள்வதில்லை.

பள்ளர் மன்னர் மரபினர் என்று கொள்வதற்கு மன்னர்க்கு ஏற்பட்டிருந்த உரிமைகளில் சிலவாவது இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மன்னர்க்குரிய உரிமைகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா? நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா கரிவலம் வந்த நல்லூர் கல்வெட்டில் ( கல்வெட்டு இலக்கம். 432/1914) பாணடியன் உக்கிரப் பெருவழுதி இம்மரபினர்க்கு வெள்ளை யானை வண்வட்டக் குடை கெராடி பகற்பந்தம் பாவாடை இரட்டைச்சிலம்பு இரட்டைக்கொடுக்கு நன்மைக்குப் பதினாறு கால்பந்தல் துண்மைக்கு இரண்டு தேர் பஞ்சவன்(பாண்டியன்) விருது பதினெட்டு மேளம் வளங்கி அன்றுதொட்டு இம்மரபினர் அவற்றை அனுபவித்து வந்துள்ளனர்.

குறிப்பு:
தெய்வேநதிர குலத்தார்க்கு( மள்ளர் / பள்ளர்) வழங்கப்பட்ட மேலே கூறிய உரிமைகள் தமிழகத்தில் பிராமணர் உட்பட இன்று உயர்சாதியெனப் பாராட்டும் வகுப்புகள் ஒன்றிற்க்காவது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

– என்று திவாகர நிகண்டும்.

செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப

– என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன

“மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் பள்ளக்கணவனாய்…”(முக்கூடற்பள்ளு)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s